நான் எந்த தவறும் செய்யவில்லை மகள் மீது சத்தியம் செய்த அமைச்சர்

Added : செப் 28, 2021
Share
Advertisement
மும்பை:சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப், அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக, தான் எந்த தவறும் செய்யவில்லை என, தன் மகள்கள் மீது அவர் சத்தியம் செய்தார்.பணப் பரிமாற்றம் மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி

மும்பை:சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப், அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக, தான் எந்த தவறும் செய்யவில்லை என, தன் மகள்கள் மீது அவர் சத்தியம் செய்தார்.


பணப் பரிமாற்றம்



மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, ஓட்டல் உரிமையாளர்களை மிரட்டி 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கித் தர போலீசாருக்கு நெருக்கடி கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் தொடர்புடைய மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான அனில் பரப் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை மூன்று முறை அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. நேரில் ஆஜராகாமல் சாக்கு போக்கு கூறி வந்த அனில் பரப், மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.


விசாரணை

வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அனில் பரப், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, தன் இரு மகள்கள் மீது சத்தியம் செய்வதாக தெரிவித்தார்.

இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனில் தேஷ்முக் வழக்கில் ஆஜரான சாட்சிகள், அனில் பரப் தொடர்பாக பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அனில் பரப்பிடம் விசாரணை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


எம்.பி., உதவியாளர் கைது

மஹாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி., பவானா காவாலிக்குச் சொந்தமான அறக்கட்டளை களில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பவானா காவாலியின் உதவியாளர் சயீத் கான் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X