பொது செய்தி

இந்தியா

நான் எந்த தவறும் செய்யவில்லை: மகள் மீது சத்தியம் செய்த அமைச்சர்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப், இன்று (செப்.28) அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில் ஓட்டல் உரிமையாளர்களை மிரட்டி 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கித் தர போலீசாருக்கு நெருக்கடி கொடுத்த முன்னாள் உள்துறை அமைச்சர் அனில்
நான், எந்த தவறும் செய்யவில்லை, மகள்,  சத்தியம்,  அமைச்சர்,மஹாராஷ்டிரா, போக்குவரத்து துறை

மும்பை : சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பரப், இன்று (செப்.28) அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னதாக, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் ஓட்டல் உரிமையாளர்களை மிரட்டி 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கித் தர போலீசாருக்கு நெருக்கடி கொடுத்த முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் மற்றொரு அமைச்சரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான அனில் பரப் மீதும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.


latest tamil news




இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை மூன்று முறை அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியிருந்தது. நேரில் ஆஜராகாமல் சாக்கு போக்கு கூறி வந்த அனில் பரப், இன்று (செப்.28) மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அனில் பரப், கூறுகையில், எனது இரு மகள்கள் மீதும் சத்தியம் செய்கிறேன். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றார்.

அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனில் தேஷ்முக் வழக்கில் ஆஜரான சாட்சிகள், அனில் பரப் தொடர்பாக பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அனில் பரப்பிடம் விசாரணை நடந்தது என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-செப்-202115:28:26 IST Report Abuse
D.Ambujavalli அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன, கோயில் பூசாரிகளா, கற்பூரம் அடித்து சத்தியம் செய்ததும் விட்டுவிடுவதற்கு?
Rate this:
Cancel
29-செப்-202110:50:01 IST Report Abuse
ஆரூர் ரங் ரொம்ப பொய் சத்தியம் பண்ணினா அந்த பிள்ளைகள் உண்மையில் இவருடையதா என்று 🤔கேட்பார்கள்.. குடிகாரன் சத்தியத்தை கூட நம்பலாம். அரசியல்வாதி 😆 சத்தியத்தை நம்பினால்,?
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-செப்-202113:08:12 IST Report Abuse
Rajஇந்த வரிசையில் மோடியின் வாக்குறுதிகளையம் சேர்ந்து கொள்ளலாம்...
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
30-செப்-202121:07:17 IST Report Abuse
Velumani K. Sundaramஇவனை அடிக்கிற அடியில திருடனுக்கு சப்போர்ட் பண்ற ராஜபன்றிகளுக்கு அடியில வலிக்கணும்....
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29-செப்-202107:34:47 IST Report Abuse
A.George Alphonse நல்லா முட்டிக்கு முட்டி தட்டினால் உண்மை தானாக வெளிவரும். இவர்களுக்கு சத்தியம் செய்வது சர்க்கரை பொங்கல் போன்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X