பவானிபூர் தேர்தலுக்கு தடை :கோல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Added : செப் 28, 2021
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேற்கு வங்கத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். நெருக்கடி நிலைமுதல்வராக பொறுப்பேற்ற அவர், பதவியை தொடர வேண்டுமெனில் நவ.,

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். நெருக்கடி நிலைமுதல்வராக பொறுப்பேற்ற அவர், பதவியை தொடர வேண்டுமெனில் நவ., 5க்குள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும்.

இந்நிலையில் பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். நாளை ஓட்டுப்பதிவு நடக்கஉள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பவானிபூர் இடைத்தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு மேற்கு வங்க தலைமை செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் அரசியலமைப்பில் நெருக்கடி நிலை ஏற்படும் என குறிப்பிட்டு இருந்தார். தலைமை செயலர் தன் கடிதத்தில் பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். எனவே அங்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.இருப்பினும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு தலைமை செயலர் கடிதம் அனுப்பியது அவசியமற்றது என்றும் நீதிபதிகள் கூறினர்.


தாக்குதல்



இதற்கிடையே இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் கட்சியின் தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது திரிணமுல் காங்., கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். திலிப் கோஷ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் தமாக முன்வந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., கோரிக்கை



பவானிபூரில் தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அனுராக் தாக்கூர், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

பவானிபூர் தொகுதியில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்க வேண்டும். திரிணமுல் காங்., தரப்பில் வன்முறை தொடர்கிறது. எனவே மத்திய படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன், 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X