பிரதமர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: விவசாய சங்க தலைவர்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டில்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 3 விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்தார்.இந்த விவசாய மசோதாக்கள் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 40க்கும் மேற்பட்ட வட இந்திய விவசாய

டில்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 3 விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்தார்.



latest tamil news




இந்த விவசாய மசோதாக்கள் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 40க்கும் மேற்பட்ட வட இந்திய விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கடந்த ஓராண்டாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டில்லி பாராளுமன்றத்தின் முன்னர் இந்த மசோதாவை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்றும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் கூறியிருந்தார். இந்த மசோதாக்கள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்றுவரை இந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பிரதமரை இது தொடர்பாக நேரில் சந்தித்து விவாதிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து ஷிரோமனி அகாலி தால் சங்க தலைவர் சுக்விர் பாதல் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.


latest tamil news




இதுகுறித்து அவர் கூறுகையில் பிரதமர் மோடி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்திக்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் விவசாய சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கும் இந்த மூன்று கருப்பு மசோதாக்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த அவர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை கட்டுப்படுத்திவரும் எஸ்கேஎம் அமைப்பு இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து விவாதிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
29-செப்-202110:03:48 IST Report Abuse
தத்வமசி நீங்கள் விவசாயியாக இருந்தால் பேசலாம். நீங்கள் காங்கிரஸ் மற்றும் காலிஸ்தான் கை கூலிகள். பாகிஸ்தான் ஆதரவில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-செப்-202110:00:41 IST Report Abuse
Sridhar இந்த போராட்டக்கும்பல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஏன் அறிவிக்க மாட்டேன் என்கிறார்கள்? சீக்கிரமே இந்த அராஜககும்பல் அழிந்து ஒழுந்தால், நாடு உருப்படும். இதுல இவிங்களோட பேச வேற செய்யணுமாம் மனநிலை சரியில்லாத ஆட்களோடும் காசுக்கு அடியாளாக செயல்படும் கும்பலோடும் ஒரு மந்திரி பேசுவதே அதிகம், இவிங்களுக்கு பிரதமரோட பேசணுமாம் அடிச்சு விரட்டுங்கய்யா...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
29-செப்-202108:02:54 IST Report Abuse
Venkatakrishnan முதலில் பிரதமர் ஊரில் இருக்கிறாரா என்றே தெரிவதில்லை... எப்பொழுதும் காணொளியிலும், வானொலியிலும்தான் தென்படுகிறார்... பத்திரிக்கை நிருபர்களைக் கண்டால் தெறித்து ஓடுகிறார்... இதை எல்லாம் கடந்து அவர் துணிச்சலாக மக்களைச் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தி, அதில் தீர்வு காண்பதெல்லாம் நடக்கிற காரியமா ? ஏதாவது தேர்தல் வந்தால் சொல்லும்... நிறைய வடைகள் காத்திருக்கின்றன...
Rate this:
தத்வமசி - சென்னை ,இந்தியா
29-செப்-202110:05:47 IST Report Abuse
தத்வமசி மனிதர்களை சந்திக்கலாம். விவசாயிகளை சந்திக்கலாம். ஏமாற்றுகார ப்ரோக்கர்களை சந்திக்க வேண்டும் என்கிற அவசியம் பிரதமருக்கு இல்லை....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
29-செப்-202122:59:09 IST Report Abuse
Aarkayஹவாலாக்கள் என்னதான் புனைபெயரில் கதறினாலும், பெரும்பான்மை மக்களின் நல்லாதரவு என்னவோ எங்கள் பிரதமர் பக்கமே ஹவாலாக்கள் கதறட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X