பொது செய்தி

இந்தியா

ஊட்டச்சத்துள்ள 35 பயிர் வகைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி, செப். 29- பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள நெல், தானியங்கள் உட்பட 35 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது, ''பருவநிலை மாறுபாடு பிரச்னையால் விவசாயம் மற்றும் நம் சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள பெரிய சவால்களை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர்
 ஊட்டச்சத்துள்ள  35 பயிர் வகைகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புதுடில்லி, செப். 29-

பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள நெல், தானியங்கள் உட்பட 35 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது, ''பருவநிலை மாறுபாடு பிரச்னையால் விவசாயம் மற்றும் நம் சூழலியலுக்கு ஏற்பட்டுள்ள பெரிய சவால்களை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


நேரடி ஒளிபரப்பு



பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளித்து அதிக மகசூலை தரும் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள நெல், தானியங்கள் உட்பட 35 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடு முழுதும் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மையங்கள், மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைகள், வேளாண் விஞ்ஞான மையங்கள் ஆகியவற்றில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இது நேரடியாக ஒளிபரப்பப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோருடன் அவர் பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாட்டு விவசாயம் அறிவியல்பூர்வமானது. விவசாயம் மற்றும் அறிவியலுக்கு இடையே உள்ள பிணைப்பு தான் தற்போது தேவை.


எதிர்கால தேவை

கடந்த 6 - 7 ஆண்டுகளில் விவசாய வளர்ச்சிக்காக பல அறிவியல் தொழில் நுட்ப முறைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாறுபாடு பிரச்னையானது விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த சூழலியலுக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.பருவநிலை மாறுபாடால் புதிய வகை பூச்சிகள், புதிய நோய்கள் என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இது மனிதர்கள், கால்நடைகள், பயிர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. மீன்வளமும் பாதிக்கப்படுகிறது.பருவநிலை மாறுபாடால் நம் விவசாயம் பாதிக்காமல் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளும், விஞ்ஞானிகளும் இணைந்தால்தான் இந்த மிகப் பெரும் சவாலை நாம் முறியடிக்க முடியும். புதிய தொழில்நுட்பங்கள், புதிய விவசாய கருவிகளே நம் விவசாயத்தின் எதிர்காலத் தேவை.


பணி குழுக்கள்



இந்த நவீன வேளாண் அறிவியல் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றடைய வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில் இது இடம்பெற்றுஉள்ளது.வரும் 2023ம் ஆண்டை சர்வதேச தானியங்கள் ஆண்டாக ஐ.நா., அறிவித்துள்ளது. நம் தானியங்கள் சர்வதேச அரங்குக்கு செல்வதை விவசாயிகளும், மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். இதற்கான பணிக் குழுக்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

.மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், முன்னாள் முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


புதுச்சேரி வெற்றி மோடி பெருமிதம்

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: புதுச்சேரியில் இருந்து நம் கட்சியைச் சேர்ந்த செல்வகணபதி ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக ராஜ்யசபாவுக்கு நம் கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கட்சியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெருமை அளிக்கிறது.

மத்திய அமைச்சர்களான சர்பானந்த சோனவால் அசாமில் இருந்தும், எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விதை முதல் சந்தை வரை...

பிரதமர் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:நம் நாட்டில் உள்ள விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு விவசாயிகள். அதனால்தான் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

மற்றவர்களை சார்ந்தோ, மற்றவரின் கருணையை எதிர்பார்த்தோ விவசாயிகள் இருக்கக் கூடாது. தங்கள் சொந்த பலத்தில் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாகும்.அந்த வகையில்இ விவசாயிகளின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. விதை முதல் உற்பத்தி செய்யும் பொருளை சந்தைபடுத்துவது வரை விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X