பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது போலீஸ் அருங்காட்சியகம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை எழும்பூரில், பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பாரம்பரிய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணித்தார்.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில், 1856ல் இருந்து, பாரம்பரியமிக்க கட்டடத்தில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.பின், 2013ல், வேப்பேரியில் புதிதாக
 மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது போலீஸ் அருங்காட்சியகம்

சென்னை:சென்னை எழும்பூரில், பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பாரம்பரிய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள

போலீஸ் அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணித்தார்.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில், 1856ல் இருந்து, பாரம்பரியமிக்க கட்டடத்தில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.பின், 2013ல், வேப்பேரியில் புதிதாக கட்டப்பட்ட, 10 மாடி கட்டடத்திற்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாற்றப்பட்டது.


அரிய வகை துப்பாக்கி

தற்போது, பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பாரம்பரிய கட்டடம், 6.47 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதில், 24 ஆயிரம் சதுரடி பரப்பில், இரண்டு தளங்களில், போலீஸ் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில், போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்திய பழைய வாகனங்கள், போலீசாரின் சீருடைகள், வாத்திய இசை கருவிகள், சாதனைகள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் கருவிகள்.மாதிரி சிறைச்சாலைகள், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை போலீசார் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1856ல் போலீஸ் கமிஷனராக இருந்த போல்டர்ஸன் துவங்கி, தற்போதைய கமிஷனர்சங்கர் ஜிவால் வரையிலான கமிஷனர்களின் படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,தேவாரம், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி வாகை சூடியதற்காக, முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அரிய வகை துப்பாக்கியை, பொது மக்களின் பார்வைக்காக ஒப்படைத்துள்ளார்.


அணிவகுப்பு மரியாதை



அ.தி.மு.க., ஆட்சியில் போலீஸ் அருங்காட்சியகம்அமைக்கும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 2021ல், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு நாளைக்கு முன், காணொலி காட்சி வாயிலாக, அருங்காட்சியகத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.தற்போது, 100 சதவீதபணிகள் நிறைவடைந்துஉள்ளன.

சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் போலீஸ் அருங்காட்சியகத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.முன்னதாக அவரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள் என, ஏராளமான ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழக காவல் துறையில் 1973ல், போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்ட உஷாராணி கவுரவிக்கப்பட்டார். அருங்காட்சியகத்தை நாளை வரை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். அதன்பின், பெரியவர்களுக்கு, 10 ரூபாய்; சிறார்களுக்கு, 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மாணவர்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X