பொது செய்தி

இந்தியா

போதை பழக்கம் உள்ளதா? விமானிகளுக்கு சோதனை!

Added : செப் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி:'விமானங்களில் பணிபுரியும் பைலட் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஜன., 31 முதல், போதை பொருள் பரிசோதனை செய்யப்படும்' என, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில் போதைப் பொருள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.

புதுடில்லி:'விமானங்களில் பணிபுரியும் பைலட் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஜன., 31 முதல், போதை பொருள் பரிசோதனை செய்யப்படும்' என, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில் போதைப் பொருள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்நிலையில் பாதுகாப்பான விமான பயணத்தை உறுதி செய்யும் விதமாக விமானங்களில் பணி புரியும் பைலட் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் போதைப் பொருள் பயன்படுத்துபவரா என்ற பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இந்த புதிய விதிமுறை ஜன., 31 முதல் அமலுக்கு வரும். போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் எனில், சம்பந்தப்பட்ட பணியாளர் குறித்து விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்துக்கு 24 மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

போதைக்கு அடிமையான பணியாளர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். சிகிச்சைக்குப் பின் உடற் தகுதி சான்று அளித்தால், அவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

இரண்டாவது முறையாகவும் போதை பொருள் பழக்கத்துக்கு ஆளான பணியாளரின் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படும். மூன்றாவது முறையாகவும் பிடிபட்டால் அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X