அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித்தேர்தலில் பிறகட்சிகளை மிரட்டும் திமுகவினர்: சீமான்

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பிறகட்சிகளை மிரட்டி அச்சுறுத்தி கொலைமிரட்டல் விடுத்தும் பணம் தருவதாக பேரம் பேசியும் வாபஸ் வாங்க வைக்க முயல்கின்றனர் .பதவிகள் ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை என தேர்தல் ஆணையம் கூறியது ஆனால் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையுமில்லை. உள்ளாட்சித்தேர்தலில் பணம் கொடுப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை

பிறகட்சிகளை மிரட்டி அச்சுறுத்தி கொலைமிரட்டல் விடுத்தும் பணம் தருவதாக பேரம் பேசியும் வாபஸ் வாங்க வைக்க முயல்கின்றனர் .பதவிகள் ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை என தேர்தல் ஆணையம் கூறியது ஆனால் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையுமில்லை. உள்ளாட்சித்தேர்தலில் பணம் கொடுப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.



latest tamil news




வேலூர்மாவட்டம்,அனைக்கட்டில் நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது இதில் சீமான் கலந்துகொண்டு பேசினார் .

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், எச்.ராஜா சீமான் தமிழரில்லை என கூறியது குறித்து கேட்டதற்கு நான் பைத்திக்காரனுக்கு பரிதாபப்படுவேன் ஆனால் பதில் சொல்லமாட்டேன் என்றார்.

பின்னர் தொடர்ந்து சீமான் கூறுகையில் கனிமொழி உதயநிதி மற்றும் திமுகதலைவர் ஸ்டாலின் பேசியது நீட்டை ரத்து செய்வோம் என ஆனால் ரத்து செய்யவில்லை 7 தமிழர்கள் விடுதலை பற்றி எதிர்கட்சியாக இருக்கும் போது பேசினார்கள் ஆனால் இப்போது ஆளுங்கட்சியான பின்னர் அதைப்பற்றி பேசவில்லை 2016 ஆம் ஆண்டு டாஸ்மாக்கை மூடுவோம் என கூறிய திமுக தற்போது வாயே திறக்கவில்லை ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறிவிட்டு ஒரு மாநிலமான மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் தற்போது இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறார்கள் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தனர் ஆனால் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் ஆட்சி கலைந்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேர்தல் கொண்டு வருவது என்பது பைத்தியக்கார தனம் மாநிலத்தில் ஆட்சி கலைந்தால் ஒட்டுமொத்தமாக எல்லா மாநிலத்திற்கும் எப்படி தேர்தலை நடத்த முடியும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்தியா என்பதே ஒரே நாடா கலாச்சாரம் சட்டைகள் எல்லாம் வேறு ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதெல்லாம் நடக்காது.


latest tamil news




தமிழக அரசு என்ன திட்டங்களை செய்துள்ளது என வெள்ளை அறிக்கை கொடுப்போம் ஆனால் மத்திய பாஜக அரசு ஏழரை ஆண்டுகளில் என்ன செய்தது என நீங்கள் வெள்ளை அறிக்கையை கொடுங்கள். தமிழக அரசு வேளாண் கடனை தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகள் பிரதமர் வீட்டை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் விவசாயிகளுக்கு நீங்கள் ஒன்றும் செய்யவில்லை திமுக நாம் தமிழர்கள் நேரடியாக தேர்தலில் மோத கூடாது என மிரட்டுகின்றனர் பணம் தருவதாக பேரம் பேசுகிறார்கள் அது வழக்கமாக செய்வது தான் ஆனாலும் நாம் தமிழர் கட்சியில் சிலர் அச்சபடுகின்றனர் .

திமுக பிறகட்சிகளை அச்சுறுத்த கூடாது தேர்தல் ஆணையத்திற்கு பணம் கொடுப்பது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை தேர்தல் ஆணையம் பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான தண்டனை என கூறியும் பதவிகளை ஏலம் விட்டுள்ளனர் அதன் மீது தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202111:42:01 IST Report Abuse
ராமகிருஷ்ணன் இந்த தில்லாலங்கடி எல்லாம் ரேட்டை கூட்டுவதற்கு, எதிர் பார்த்த பணம் வந்து விட்டால் அடக்கி வாசிப்பார்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
29-செப்-202108:43:35 IST Report Abuse
Balaji 2006 அக்டொபேர் ஊராட்சி தேர்தல் கண்முன்னே நிழலாடுகிறது.. ரௌடிகள் பைக்கில் வளம் வந்து வாக்காளர்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் செய்து தாங்களே தங்களுக்கு ஒட்டு போட்டுக்கொண்டது நினைவிற்கு வருகிறது.. முத்தமில் வித்துப்போலச்சவர் கிளீனர் அரங்கேற்றிய ராஜ முந்திரி அது... ஹி ஹி...
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
29-செப்-202107:11:56 IST Report Abuse
Godyes எப்போதும் ஊராட்சி தேர்தல்களை சட்டமன்ற தேர்தலுக்கு முன் வைக்கவேண்டும். அதற்கு பின் நடப்பதால் ஆட்சி அதிகாரத்தை தவறாக . பயன்படுத்துவர். தேர்தல் ஆணையம் சேணம் கட்டிய குதிரை போல் இல்லாமல் தேர்தல் போன்ற பொது விவகாரங்களில் நீக்கு போக்காக நடக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X