அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்'

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:'சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இவர், சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும் விளக்குகள், அரசு வாகனங்களுக்கு

சென்னை:'சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இவர், சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும் விளக்குகள், அரசு வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவிகள் கொள்முதல் செய்தது உள்ளிட்ட டெண்டர் விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தனக்கு வேண்டியவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களில் தான், பஸ்களுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய வேண்டும்; பஸ்களுக்கு பாடி கட்ட வேண்டும் என அதிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, அவருக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார்கள் தரப்பட்டன. லஞ்ச ஒழிப்பு போலீசார் 2016, 2021 சட்டசபை தேர்தலின் போது, விஜயபாஸ்கர் தன் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்திருந்த அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை ஆய்வு செய்தனர்.அப்போது, விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 8.62 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்தது. விஜயபாஸ்கர் மீது, கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின், ஜூலை 22ல், சென்னை மற்றும் கரூரில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், மனைவி விஜயலட்சுமி மற்றும் ஒளிரும் பட்டைகள், ஜி.பி.எஸ்., கருவிகள் கொள்முதல் செய்து கொடுத்த நிறுவனங்கள் என 26 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதில் 25.26 லட்சம் ரூபாய் ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது நடந்த பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், 'சொத்து குவிப்பு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். போலீசார் கூறுகையில், 'விஜயபாஸ்கர் கரூரில் தான் ஆஜராக வேண்டும் என்பதில்லை. சென்னையில் இருந்தால் அங்கேயும் ஆஜராகலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X