பொது செய்தி

தமிழ்நாடு

அக்டோபர் 10ல் மீண்டும் தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம்

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்., 10ல் நடைபெற உள்ளது. இதற்கு உதவும் வகையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒரே நாளில் 14.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்களாக நடந்த தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 70 லட்சம்

சென்னை:தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்., 10ல் நடைபெற உள்ளது. இதற்கு உதவும் வகையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒரே நாளில் 14.10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்களாக நடந்த தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 70 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 4.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நான்காம் கட்ட தடுப்பூசி முகாம், அக்., 10ல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து, 14.10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தது. இந்த தடுப்பூசிகளை பெற்ற சுகாதார அதிகாரிகள், அவற்றை மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X