அரசியல் செய்தி

தமிழ்நாடு

1 -8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ., 1 முதல் பள்ளிகள் திறப்பு

Updated : செப் 29, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர், ௧ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்பின், கூட்டத்தில்
 1 - 8ம் வகுப்பு மாணவர்கள்,  நவ., 1 முதல் பள்ளிகள் திறப்பு


சென்னை : தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர், ௧ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அக்டோபர் 31 காலை 6:00 மணி வரை, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

* சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து அமலில் இருக்கும்

* நோய் தொற்று பரவாமல் இருக்க, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்


குறைதீர்வு நாள்பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னை தலைமை செயலகம் வருகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க, அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும், திங்கள்தோறும் பொதுமக்கள் குறை தீர்வு நாள்; மாதம்தோறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.


நேரடி வகுப்புகள்மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆலோசனைப்படி, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளும், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பள்ளி செல்லாமல், பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனவே, அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவ, மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, நவம்பர் 1 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.


பொதுவானவைமாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தப்படும், சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு, பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கடைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலத்தில், பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே, கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க இயலும். இதை உணர்ந்து, அரசின் அனைத்து முயற்சிகளுக்கும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும், விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202115:09:05 IST Report Abuse
Vittalanand போட்டோவுக்கு போஸ் குடுக்கும் இந்த சின்ன பையனுக்கு எல் கே ஜி வகுப்பு எம்பொ?
Rate this:
Cancel
Iyyappan - chennai,இந்தியா
29-செப்-202112:29:17 IST Report Abuse
Iyyappan தயவுசெய்து குழந்தைகளின் உயிரோடு விளையாட வேண்டாம் இன்னும் அவர்களுக்கு தடுப்புஊசி வரவில்லை 1 - 5 வகுப்பு திறக்க வேண்டாம், குழந்தைகளுக்கு COVID பற்றி அவர்களுக்கு தெரியாது
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
29-செப்-202111:03:25 IST Report Abuse
தத்வமசி மகிழ்ச்சி. மீண்டும் அம்பதுக்கு அம்பது என்கிற வழிமுறையை அறிவிக்காதீர்கள். இது கட்டாயம் பலன் அளிக்காது. முதலில் ஐந்து முதல் எட்டு வகுப்பு வரை வரும் அக்டோபர் விஜயதசமி அன்றோ அல்லது அதற்கு அடுத்த வாரமோ திறந்து, ஒரு சீராக தொடர்ந்து நடைபெற தொடங்கியவுடன், பத்து நாள் கழித்து நவம்பர் ஒன்றாம் தேதி ஒன்று முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை திறக்கும் படி ஆணையிடலாம். ஏழாம் வகுப்பு வரை முக கவசம் அணிய வேண்டாம் என்று சுகாதார நிறுவனகள் கூறியுள்ளன. அதையும் பின்பற்றலாம். பிள்ளைகளின் படிப்பை விட விளையாட்டு மற்றும் செயல் முறை பாடத்திட்டங்களை கடைபிடிக்க அறிவுரை வழங்கலாம். பள்ளிகளில் மாணவர்கள் விளையாடக் கூடாது என்கிற விதியை உடனடியாக நீக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X