சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும், 'கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' பெற,10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி, கருணாநிதி தன் சொந்த நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் வழங்கி, கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளையை, அந்நிறுவனத்தில் நிறுவினார்.
பாராட்டு சான்றிதழ்
அந்த அறக்கட்டளை சார்பில், செம்மொழி தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும், 'கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும், கருணாநிதி உருவச்சிலையும் தரப்படும்.
இந்த விருது, 2010 முதல் 2019 வரையிலான, 10ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் தலைமையில், அந்த நிறுவனத்தின் எட்டாவது ஆட்சிக் குழு கூட்டம், ஆக., 30ல் நடந்தது. ஒப்புதல்அதில், முதல்வரால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவினர் தேர்வு செய்த 10 விருதாளர்களுக்கு, விருது வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 2010ம் ஆண்டுக்கு, பென்சில்வேனியா பல்கலை முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் ராஜம்; 2011 - சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர் கோதண்டராமன்; 2012 - தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி; 2013 - புதுச்சேரி பல்கலை முன்னாள் பதிவாளர் மருதநாயகம்.
கடந்த, 2014 - சென்னை பல்கலை திருக்குறள் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் மோகனராசு; 2015 - மாநில கல்லுாரி முன்னாள் தமிழ் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.கடந்த 2016 - புதுச்சேரி பல்கலை வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் ராஜன்; 2017 - ஜெர்மனி பல்கலை முன்னாள் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்.தொடர்ந்து, 2018 - சென்னை புதுக் கல்லுாரி முன்னாள் தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்; 2019 - தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சிவமணி ஆகியோர் விருதாளர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE