காஞ்சி : சிறிய ரக சாம்பார் வெங்காயம் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், பழத்தோட்டம் அமைத்துள்ளேன்.
இதில், 6 கிலோ சிறிய ரக சாம்பார் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தேன்; 70 நாளுக்கு பின், 60 கிலோ வெங்காயம் மகசூல் எடுத்துள்ளேன். இதை, விதைக்கு தயார்படுத்தி உள்ளேன்.பொதுவாக ஒரு கிலோவில் பயிரிட்டால் 6 - 7 கிலோ தான் மகசூல் எடுக்க முடியும். ஆனால் நான் வரிசை முறையில் நடவு செய்து, மண்புழு உரமிட்டு சாகுபடி செய்தேன்.ஒரு ஏக்கர் பரப்பில், சிறிய ரக வெங்காயம் சாகுபடி செய்ய 400 கிலோ விதை போதுமானது. இதில் 3 டன் வரை மகசூல் எடுக்கலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். நான் செய்த சாகுபடியில் 4 டன் சாம்பார் வெங்காயம் மகசூல் எடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE