சிறிய வெங்காயத்தில் கூடுதல் மகசூல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறிய வெங்காயத்தில் கூடுதல் மகசூல்

Added : செப் 28, 2021
Share
காஞ்சி : சிறிய ரக சாம்பார் வெங்காயம் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், பழத்தோட்டம் அமைத்துள்ளேன். இதில், 6 கிலோ சிறிய ரக சாம்பார் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தேன்; 70 நாளுக்கு பின், 60 கிலோ வெங்காயம் மகசூல் எடுத்துள்ளேன். இதை, விதைக்கு தயார்படுத்தி

காஞ்சி : சிறிய ரக சாம்பார் வெங்காயம் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில், பழத்தோட்டம் அமைத்துள்ளேன்.

இதில், 6 கிலோ சிறிய ரக சாம்பார் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்தேன்; 70 நாளுக்கு பின், 60 கிலோ வெங்காயம் மகசூல் எடுத்துள்ளேன். இதை, விதைக்கு தயார்படுத்தி உள்ளேன்.பொதுவாக ஒரு கிலோவில் பயிரிட்டால் 6 - 7 கிலோ தான் மகசூல் எடுக்க முடியும். ஆனால் நான் வரிசை முறையில் நடவு செய்து, மண்புழு உரமிட்டு சாகுபடி செய்தேன்.ஒரு ஏக்கர் பரப்பில், சிறிய ரக வெங்காயம் சாகுபடி செய்ய 400 கிலோ விதை போதுமானது. இதில் 3 டன் வரை மகசூல் எடுக்கலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். நான் செய்த சாகுபடியில் 4 டன் சாம்பார் வெங்காயம் மகசூல் எடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X