பொது செய்தி

தமிழ்நாடு

சிலைகள் கண்டெடுப்பில் மோசடி ஹிந்து அமைப்பினர் 'பகீர்' புகார்

Added : செப் 28, 2021
Share
Advertisement
நாகப்பட்டனம்:தேவபுரீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக, ஹிந்து அமைப்பினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.பூஜை பொருட்கள்நாகை மாவட்டம், தேவூரில் பழமையான தேவபுரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி, நவக்கிரஹ சன்னிதி அருகே பள்ளம் தோண்டும்போது ஐம்பொன்னால் ஆன 17 சுவாமி சிலைகள் 36

நாகப்பட்டனம்:தேவபுரீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக, ஹிந்து அமைப்பினர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.


பூஜை பொருட்கள்

நாகை மாவட்டம், தேவூரில் பழமையான தேவபுரீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி, நவக்கிரஹ சன்னிதி அருகே பள்ளம் தோண்டும்போது ஐம்பொன்னால் ஆன 17 சுவாமி சிலைகள் 36 விதமான பூஜை பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.

இந்நிலையில், சிவசேனா மாநில செயலர் சுந்தரவடிவேலன், ஹிந்து மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப், அகில இந்திய ஹிந்து வளர்ச்சி கழக கொள்கை பரப்பு செயலர் சோமசுந்தரம் ஆகியோர், கலெக்டர் அருண் தம்புராஜிடம் அளித்த புகார்:திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிலைகள், சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அரசு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் யாருக்கும் தகவல் அளிக்கப்படாமல், ஒப்பந்ததாரரால் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் துாணுக்கு பக்கவாட்டில் புதைக்கப் பட்டதாக தெரியவருகிறது. பொதுமக்கள் வழிபாடுஅவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் உண்மை தன்மையை பொது மக்களுக்கு விளக்க வேண்டும். சிலைகள் கண்டெடுப்பில் நடந்த மோசடி குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். சிலைகளை மியூசியத்தில் வைக்காமல், தேவபுரீஸ்வரர் கோவிலில் பொது மக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X