சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 28, 2021
Share
Advertisement
போதை ஏட்டு 'சஸ்பெண்ட்'புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் அன்பழகன், 52; இவர், 21ம் தேதி கீரனுார் பகுதியைச் சேர்ந்த மணல் திருடர்களுடன் சேர்ந்து மது அருந்தி, மயங்கி விழுந்தார்.அவரது 'வாக்கி டாக்கி'யை மணல் கடத்தல் கும்பலில் நால்வர் திருடிச் சென்றனர். கீரனுார் போலீசார், நான்கு பேரையும் 25ம் தேதி கைது செய்து, வாக்கி

போதை ஏட்டு 'சஸ்பெண்ட்'

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் அன்பழகன், 52; இவர், 21ம் தேதி கீரனுார் பகுதியைச் சேர்ந்த மணல் திருடர்களுடன் சேர்ந்து மது அருந்தி, மயங்கி விழுந்தார்.அவரது 'வாக்கி டாக்கி'யை மணல் கடத்தல் கும்பலில் நால்வர் திருடிச் சென்றனர். கீரனுார் போலீசார், நான்கு பேரையும் 25ம் தேதி கைது செய்து, வாக்கி டாக்கியை பறிமுதல் செய்தனர். ஏட்டு அன்பழகனை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

மகன் மீது விரக்தி: பெற்றோர் தற்கொலை

நாகர்கோவில்: குமரி மாவட்டம், ராமன்புதுாரைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், 56; மனைவி பூபதி, 41; ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் வெங்கடேஸ்வரன், 21; அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். இதனால், அவரது பெற்றோர் மன வேதனையில் இருந்தனர்.நேற்று முன்தினம் மகள் வேலைக்கு சென்றபோது தனியாக இருந்த தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.

கோயில் விளக்கால் சிறுமி பலி

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கப்படையைச் சேர்ந்த வேல்முருகனுக்கு தெய்வவெனுசியா, 6; தெய்வ கனுசியா, 4, ஆகிய இரண்டு மகள்கள். கடந்த 21ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில், தெய்வ வெனுசியா தரிசனம் முடித்து வெளியே வந்தார்.கோவில் விளக்கில், அவரது கவுன் துணி பட்டதால் தீப்பற்றிக் கொண்டது. பிளாஸ்டிக் வேலைப்பாடுகளுடன் கூடிய கவுன் என்பதால், தீப்பற்றியதும் சிறுமியின் உடலில் ஒட்டிக் கொண்டது.

அலறியபடி வீட்டுக்கு ஓடினார்.தாய் மதிவதனா, சிறுமி மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தீக்காயத்துடன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X