நாளை முதல் பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல்

Added : செப் 28, 2021
Share
சென்னை:'பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை முதல், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்' என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, நாளை பகல் 1:00 மணி முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மதிப்பெண்

சென்னை:'பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை முதல், மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்' என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, நாளை பகல் 1:00 மணி முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மதிப்பெண் பட்டியலை பெறலாம்.இந்த மதிப்பெண் பட்டியல், சம்பந்தப் பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு தந்தால் மட்டுமே செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X