பொது செய்தி

தமிழ்நாடு

'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, 11, 12ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு, 2019 செப்., 1ல் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2019 நவம்பர், 12ல் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,

சென்னை:'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, 11, 12ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு, 2019 செப்., 1ல் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2019 நவம்பர், 12ல் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், அடுத்த மாதம் 11, 12ம் தேதிகளில் நடக்க உள்ளது.

இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு, இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X