சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி முதல்வருக்கு மிரட்டல் 

Added : செப் 28, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில்:கல்லுாரி முதல்வரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி பிரமுகரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் தென்னரசு, 39; காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லுாரில் உள்ள எம்.ஆர்.கே. கலை, அறிவியல் கல்லுாரியில் முதல்வர். குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பசுமைவளவன், 52; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள்

காட்டுமன்னார்கோவில்:கல்லுாரி முதல்வரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வி.சி., கட்சி பிரமுகரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் தென்னரசு, 39; காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லுாரில் உள்ள எம்.ஆர்.கே. கலை, அறிவியல் கல்லுாரியில் முதல்வர். குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பசுமைவளவன், 52; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் அணி மாநில செயலர்.

கடந்த 27ம் தேதி, பழஞ்சநல்லுார் கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்காக, வி.சி., முன்னாள் மாவட்டச் செயலர் செல்லப்பன் கடிதம் கொடுத்தார். அதற்கு, 'அரசு விதிப்படியும், கல்லுாரி நிர்வாக உத்தரவுப்படியும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. சிபாரிசு கடிதத்தை ஏற்க முடியாது' என முதல்வர் தென்னரசு கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பசுமைவளவன், தென்னரசை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக திட்டி, 'காணாமல் போய் விடுவாய்' என கொலை மிரட்டல் விடுத்தார். பசுமை வளவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X