நகராட்சிகளில் குறைந்த விலை மனைகள் நிலம் தேடும் வீட்டுவசதி சங்கங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சிகளில் குறைந்த விலை மனைகள் நிலம் தேடும் வீட்டுவசதி சங்கங்கள்

Added : செப் 28, 2021
Share
சென்னை:நகராட்சி பகுதிகளில், குறைந்த விலையில் மனைகள் விற்பனை செய்ய, நிலம் தேடும் பணிகளை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கி உள்ளன. தமிழகத்தில் 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. மக்களுக்கு குறைந்த விலையில் வீடு, மனைகள் கிடைப்பதற்காக இந்த சங்கங்கள் துவக்கப்பட்டன.அரசின் உத்தரவாத அடிப்படையில், இந்த சங்கங்கள் வாயிலாக வீட்டு கடன்கள் குறைந்த வட்டியில்

சென்னை:நகராட்சி பகுதிகளில், குறைந்த விலையில் மனைகள் விற்பனை செய்ய, நிலம் தேடும் பணிகளை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவக்கி உள்ளன.

தமிழகத்தில் 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. மக்களுக்கு குறைந்த விலையில் வீடு, மனைகள் கிடைப்பதற்காக இந்த சங்கங்கள் துவக்கப்பட்டன.அரசின் உத்தரவாத அடிப்படையில், இந்த சங்கங்கள் வாயிலாக வீட்டு கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வந்தன.

நிதி நிர்வாக குளறுபடிகளால் 200க்கு மேற்பட்ட சங்கங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த சங்கங்களை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை கூட்டுறவு வீட்டு வசதித்துறை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம் உள்ள நிலங்களை பயன்படுத்தி, புதிய மனை பிரிவுகளை உருவாக்க உத்தரவிடப்பட்டது. அத்துடன், நகராட்சி பகுதிகளில், குறைந்த விலையில் மனைகள் விற்கும் திட்டத்தை துவக்க, இச்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து, வீட்டு வசதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகர்ப்புற பகுதிகளில் மக்களுக்கு, குறைந்த விலையில் வீட்டு மனைகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக நகராட்சிகளில் நிலம் தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.அந்தந்த பகுதிகளில் இருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் வாயிலாக, இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயன் படுத்தப்படாத அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் இதற்கு பயன்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X