கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குறுவை நெல்லுக்கு காப்பீடு கோரி வழக்கு

Added : செப் 28, 2021
Share
Advertisement
மதுரை:உயர்நீதி மன்ற கிளையில், தஞ்சாவூர் ஜீவகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:குறுவை பருவ நெல், சிவப்பு பீன்ஸ் சாகுபடிக்கு பயிர் காப்பீடு வசதி, அரசின் அறிவிப்பில் இல்லை. ஆண்டுதோறும் இயற்கை பேரிடரால், டெல்டா விவசாயிகள் பாதிக்கின்றனர். இழப்பை ஈடு செய்ய, காப்பீடு திட்டமே அவர்களுக்கு கைகொடுக்கிறது.\ சில ஆண்டுகளுக்கு முன், நெல்லுக்கு காப்பீடு செய்யாத பல விவசாயிகள் தற்கொலை

மதுரை:உயர்நீதி மன்ற கிளையில், தஞ்சாவூர் ஜீவகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

குறுவை பருவ நெல், சிவப்பு பீன்ஸ் சாகுபடிக்கு பயிர் காப்பீடு வசதி, அரசின் அறிவிப்பில் இல்லை. ஆண்டுதோறும் இயற்கை பேரிடரால், டெல்டா விவசாயிகள் பாதிக்கின்றனர். இழப்பை ஈடு செய்ய, காப்பீடு திட்டமே அவர்களுக்கு கைகொடுக்கிறது.\

சில ஆண்டுகளுக்கு முன், நெல்லுக்கு காப்பீடு செய்யாத பல விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பு 2021 காரீப் குறுவை பருவ காப்பீடு திட்டத்தில் நெல், பீன்ஸ் பயிர்களை சேர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசாமி, மத்திய வேளாண் துறை இணைச் செயலர் - கடன், மாநில வேளாண் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X