சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்ட எதிர்ப்பு: மக்களை எச்சரித்த போலீசார்

Added : செப் 28, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.-திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாவது மண்டல பகுதிகளில் இருந்து தினமும் 250 டன் குப்பை சேகரமாகிறது.சேகரமாகும் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு,
 குப்பை கொட்ட எதிர்ப்பு:  மக்களை எச்சரித்த போலீசார்

அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.-திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாவது மண்டல பகுதிகளில் இருந்து தினமும் 250 டன் குப்பை சேகரமாகிறது.
சேகரமாகும் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, துர்நாற்றம் ஏற்படும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை அனைத்து கட்சியினர் தலைமையில், 200க்கு மேற்பட்டோர் குப்பை கொட்ட பாறைக்குழிக்கு செல்லும் ரோட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் மகேந்திரன், தலைமையில் திருமுருகன்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முறைப்படிதான் குப்பை கொட்டப்படுகிறது.தடுத்து போராட்டம் என்ற பெயரில் கூட்டம் கூடினால், கைது செய்வோம். கலைந்து செல்லுங்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.அவிநாசி தாசில்தார் ராகவி, பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ''போராட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட கூடாது. கலெக்டரை சந்தித்து முறைப்படி மனு கொடுங்கள்,'' என வலியுறுத்தினார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X