நான்கு ஊராட்சியில் உரம் தயாரிப்பு மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு ஊராட்சியில் உரம் தயாரிப்பு மையம்

Added : செப் 28, 2021
Share
திருப்பூர்:நகரப்பகுதியை ஒட்டியுள்ள, நான்கு ஊராட்சி களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறு உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி அருகே அமைந்துள்ள ஊராட்சிகளின் மக்கள் தொகை, நகரப்பகுதிக்கு இணையாக இருக்கிறது. தினமும் டன் கணக்கில் குப்பை உருவாகுவதால், அவற்றை சேகரித்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.துாய்மை

திருப்பூர்:நகரப்பகுதியை ஒட்டியுள்ள, நான்கு ஊராட்சி களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறு உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி அருகே அமைந்துள்ள ஊராட்சிகளின் மக்கள் தொகை, நகரப்பகுதிக்கு இணையாக இருக்கிறது. தினமும் டன் கணக்கில் குப்பை உருவாகுவதால், அவற்றை சேகரித்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
துாய்மை பணியாளர் மூலம், வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பொது இடங்களில் அப்புறப்படுத்தப்படுகின்றன. நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், சேகரிக்கப்படும் குப்பையை அகற்றுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, திருப்பூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை பிரச்னை, பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
சுகாதார சீர்கேட்டின் தீவிரத்தை உணர்ந்து, தேங்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க, உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து, உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, தலா, 25 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அவிநாசி ஒன்றியத்தில், சேவூர், பழங்கரை ஊராட்சி, திருப்பூர் ஒன்றியத்தில், ஈட்டிவீரம்பாளையம், மங்கலம் ஊராட்சி ஆகியவற்றில், சிறு உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக, துாய்மை பாரத இயக்கம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X