போலீஸ் டைரி: விளையாட்டு வினையானது

Added : செப் 28, 2021
Share
Advertisement
திண்டுக்கல்லை சேர்ந்தவர் திருத்துவராஜ், 45; விவசாய கூலி தொழிலாளி. மனைவி சோபியா, 39, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கின்றனர். குழந்தைகள் இருவரும் படிக்காமல் குறும்பு செய்து வந்துள்ளனர். இதனால், குழந்தைகளை பயமுறுத்த வேண்டி, வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சோபியா குடித்துள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனையில்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் திருத்துவராஜ், 45; விவசாய கூலி தொழிலாளி. மனைவி சோபியா, 39, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கின்றனர். குழந்தைகள் இருவரும் படிக்காமல் குறும்பு செய்து வந்துள்ளனர். இதனால், குழந்தைகளை பயமுறுத்த வேண்டி, வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை சோபியா குடித்துள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆட்டோ கவிழ்ந்துமுதியவர் பலிபல்லடம், கொசவம்பாளையத்தை சேர்ந்த நாராயணசாமி, 54; பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று, தனது மருமகனுக்கு சொந்தமான ஆட்டோவில் கொசவம்பாளையம் ரோட்டில் செல்லும்போது, ரோட்டோர மண் சரித்து ஆட்டோ நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த நாராயணசாமி, கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X