கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகள் ஒழிப்பு சட்டம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை:'கிரிமினல்களை திறமையாக அணுகுவதற்கு இயற்றப்பட்ட சட்ட மசோதா, அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை அயனாவரத்தில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடந்த மோதலில், ரவுடி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில், வேலு என்பவர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில்

சென்னை:'கிரிமினல்களை திறமையாக அணுகுவதற்கு இயற்றப்பட்ட சட்ட மசோதா, அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் இரண்டு கோஷ்டிகளுக்குள் நடந்த மோதலில், ரவுடி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில், வேலு என்பவர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து, வேலு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.

கிரிமினல்களை கட்டுப்படுத்த, போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டம் போல, தமிழகத்திலும் புதிய சட்டம் இயற்றுவது குறித்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி, ''அரசு நியமித்த குழு அளித்த பரிந்துரையின்படி, சட்டத்துக்கான வரைவு மசோதா தயாராகி உள்ளது. ''அடுத்த சட்டசபை கூட்டத் தொடரின் போது, இந்த வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'சட்டசபையில் தாக்கல் செய்ய வரைவு மசோதாவை தயாராக வைத்துள்ள அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.இந்தச் சட்டம் நிறைவேறினால், கிரிமினல்களை போலீசார் திறமையாக அணுக முடியும்' என்று கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X