சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி மர்ம சாவு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை

Added : செப் 28, 2021
Share
Advertisement
பண்ருட்டி:பண்ருட்டி முந்திரி தொழிலாளி மர்ம சாவு வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60; கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்தார். கடந்த 20ம் தேதி, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, ஆலை தரப்பில் கூறப்பட்டது. கோவிந்தராஜ்
 தொழிலாளி மர்ம சாவு: சி.பி.சி.ஐ.டி., விசாரணை

பண்ருட்டி:பண்ருட்டி முந்திரி தொழிலாளி மர்ம சாவு வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 60; கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்தார். கடந்த 20ம் தேதி, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, ஆலை தரப்பில் கூறப்பட்டது. கோவிந்தராஜ் உறவினர்கள் இதை ஏற்க மறுத்து, அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று பகல் 12:00 மணிக்கு பண்ருட்டி பயணியர் விடுதிக்கு வந்தனர். காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆஜராகி, வழக்கு விபரங்கள் குறித்து எடுத்து கூறினார். பின், கோவிந்தராஜ் மகன் செந்தில்வேலை அழைத்து விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X