சமையல் மாஸ்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமையல் மாஸ்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி

Added : செப் 29, 2021
Share
விழுப்புரம்,:ஓட்டல் சமையல் மாஸ்டரிடம் 5.68 லட்சம் ரூபாய் மோசடி செய்த இங்கிலாந்து பெண் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சித் தாஸ், 44; ஓட்டலில் சமையல் மாஸ்டர். இவருக்கு, முகநுாலில் அறிமுகமான வின்னா ஆண்ட்ரசன் என்ற பெண், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி, சஞ்சித் தாசை திருமணம் செய்து

விழுப்புரம்,:ஓட்டல் சமையல் மாஸ்டரிடம் 5.68 லட்சம் ரூபாய் மோசடி செய்த இங்கிலாந்து பெண் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சித் தாஸ், 44; ஓட்டலில் சமையல் மாஸ்டர். இவருக்கு, முகநுாலில் அறிமுகமான வின்னா ஆண்ட்ரசன் என்ற பெண், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி, சஞ்சித் தாசை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து, கடந்த மே 17ம் தேதி அந்த பெண், தன் வீட்டை விற்று, 50 ஆயிரம் பவுண்ட்ஸ் மற்றும் வாட்ச், ஐபோன் ஆகியவற்றை பார்சலில் அனுப்பியுள்ளதாக சஞ்சித் தாஸிடம் கூறியுள்ளார்.

பின், டில்லி விமான நிலையத்தில், ஷிப்பாலிஎன்ற பெண் அதிகாரியிடம் பார்சல் உள்ளதாகவும், அதற்கான டெலிவரி கட்டணம், ஏஜன்ட் கட்டணம், வரி உள்ளிட்டவைகளுக்கு, 5 லட்சத்து 68 ஆயிரத்து 14 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துமாறும் கூறியுள்ளார்.இதை நம்பி பணத்தை செலுத்திய சஞ்சித் தாசுக்கு, எந்த பார்சலும் வரவில்லை. சஞ்சித் தாஸ் புகாரின்படி, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X