பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் நோக்கத்துடன் இடமாறுதல் வேண்டாமே! அரசு ஊழியர் போராட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஊராட்சி செயலாளர்களை, அரசியல் உள்நோக்கத்துடன் இடமாறுதல் செய்வதை தவிர்க்க வேண்டும், என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஊத்துக்குளி ஒன்றியத்தில் வழங்கிய இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று, முற்றுகை போராட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த
 அரசியல் நோக்கத்துடன் இடமாறுதல் வேண்டாமே! அரசு ஊழியர் போராட்டம்

திருப்பூர்:ஊராட்சி செயலாளர்களை, அரசியல் உள்நோக்கத்துடன் இடமாறுதல் செய்வதை தவிர்க்க வேண்டும், என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஊத்துக்குளி ஒன்றியத்தில் வழங்கிய இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் சண்முகம், ஊரக வளர்ச்சி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர், போராட்டத்தை விளக்கி பேசினர்.கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, முற்றுகையிட சென்றதால், போலீசார், கலெக்டர் அலுவலக வளாக கதவுகளைமூடினர்.போர்டிகோவில் அமர்ந்த அலுவலர்கள், பேச்சு நடத்தி, உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X