பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்புக்கேற்ற கல்வி:வேளாளர் கல்லூரி தாளாளர் பேச்சு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவியர் 320 பேருக்கு 2.5 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையை வழங்கி, கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் பேசியதாவது:எதிர்காலத்தில் சுய தொழில் துவங்கவும், நல்ல வேலை வாய்ப்புகளும் கொண்ட கணினி பொறியியல், மெக்கானிக்கல், சிவில், எலக்டிரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பயோ
 வேலை வாய்ப்புக்கேற்ற கல்வி:வேளாளர் கல்லூரி தாளாளர் பேச்சு

திருப்பூர்:ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவியர் 320 பேருக்கு 2.5 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையை வழங்கி, கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் பேசியதாவது:எதிர்காலத்தில் சுய தொழில் துவங்கவும், நல்ல வேலை வாய்ப்புகளும் கொண்ட கணினி பொறியியல், மெக்கானிக்கல், சிவில், எலக்டிரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் உள்ளிட்ட துறைகளில் 4.0 தொழில் நுட்ப யுக்தியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

உயிர் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளடக்கி பயில்வதன் மூலம், மருத்துவ உபகரணங்கள், உடல்மாற்று உறுப்புகள் வடிவமைத்தல் போன்றவற்றில் சிறந்து விளங்க முடியும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இது இக்கல்லுாரியைப் பொறுத்த வரை முழுமையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில், சர்வதேச அளவில் பல்வேறு பல்கலை பேராசிரியர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X