பொது செய்தி

தமிழ்நாடு

கார் மோதி 2 பெண் ஒப்பந்த ஊழியர் பலி பாடி அருகே அதிகாலையில் கோர விபத்து

Added : செப் 29, 2021
Share
Advertisement
வில்லிவாக்கம் : ரெட்டேரி, 200 அடி சாலையில், அதிகாலை நேரத்தில், சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது, கார் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் இறந்தனர். சிறுவன் உட்பட, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.பெரம்பூர், சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுஜித், 19; தனியார் கல்லுாரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று அதிகாலை, 3:00
 கார் மோதி 2 பெண் ஒப்பந்த ஊழியர் பலி  பாடி அருகே அதிகாலையில் கோர விபத்து

வில்லிவாக்கம் : ரெட்டேரி, 200 அடி சாலையில், அதிகாலை நேரத்தில், சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது, கார் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் இறந்தனர்.

சிறுவன் உட்பட, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.பெரம்பூர், சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுஜித், 19; தனியார் கல்லுாரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தன் நண்பர்கள் மூவருடன், 'ஹூண்டாய் சிட்டி' காரில், கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.ரெட்டேரி 200 அடி சாலையில், கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக, 200 அடி சாலையில், பாடி, தாதங்குப்பம் என்ற இடத்தில், சாலையை சுத்தம் செய்தல் மற்றும் வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது, சுஜித் ஓட்டி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. விபத்தில், 10 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேர் துாக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர்.இதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சசிகலா, 27 சம்பவ இடத்திலும், செஞ்சியைச் சேர்ந்த காமாட்சி, 25 மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் பரிதாபமாக இறந்தனர்.மற்ற ஏழு பேர் படுகாயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்தை ஏற்படுத்திய மாணவர் சுஜித் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

பாதுகாப்பு கேள்விக்குறி!

சாலை பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடும் போது, அது குறித்த எச்சரிக்கை பலகை, 'ரிப்ளக்டர்' ஆகியவற்றை வைத்து, மின் விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ஆடைகள் அணிந்து பணி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், முதல்வரின் வருகைக்காக, அவசர கதியில், எந்த பாதுகாப்பும் இல்லாமல், ஊழியர்கள் அதிகாலை நேரத்தில் பணி செய்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களில், 10 வயது சிறுவன், ஆறு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X