சென்னை :ஆட்சி மாற்றத்துக்கு பின் முதன்முதலாக நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில், உறுப்பினர் உதயநிதி பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆனார்.அண்ணா பல்கலை நிர்வாக பணிகள் குறித்த முக்கிய முடிவுகளை, பல்கலையின், 'சிண்டிகேட்' குழுவில் ஆலோசித்து முடிவு செய்வது வழக்கம். தி.மு.க., ஆட்சி வந்த பின், இதுவரை அண்ணா பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், சிண்டிகேட் கூட்டம் அண்ணா பல்கலையில், நேற்று துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. படப்பிடிப்புஇதில், உயர் கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா, பேராசிரியர்கள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், சிண்டிகேட் புதிய உறுப்பினரான உதயநிதி பங்கேற்று, அண்ணா பல்கலையின் முன்னேற்றம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. வெளியூரில் சினிமா படப்பிடிப்பு பணிகள் இருந்ததால், அவரால் வர முடியவில்லை என்று தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
![]()
|
ஆட்சிக்கு வருவதற்கு முன், அண்ணா பல்கலை நிர்வாக பிரச்னைகள் குறித்து பேசி வந்த உதயநிதி, தற்போது, சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்கேற்காமல் போனது விவாதத்தை கிளப்பியுள்ளது. பேசியது என்ன?சிண்டிகேட் கூட்டத்தில், அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, 500க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல். புதிய பேராசிரியர்களை நியமித்தல், பாடத்திட்டத்தில் மாற்றம், புதிய கல்வி கொள்கை, பேராசிரியர்கள் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்துதல் குறித்தும், புதிய பதிவாளர் நியமனம் குறித்தும் பேசப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE