சர்வதேச விமான போக்குவரத்து அக்., 31 வரை தடை தொடரும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான போக்குவரத்து அக்., 31 வரை தடை தொடரும்

Added : செப் 29, 2021
Share
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடந்தஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.இந்நிலையில் சர்வதேச விமானப்

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடந்தஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்.,31 வரை நீட்டிக்கப் படுவ தாக, விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது. 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய ஒப்புதல்களுடன், சில குறிப்பிட்ட மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X