அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடையில் அமர்ந்து மனு வாங்கிய எம்.எல்.ஏ.,

Added : செப் 29, 2021
Share
Advertisement
தேவகோட்டை:தேவகோட்டையில் நகர காங்., கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் அருகில் உள்ள கடையில்அமர்ந்து காரைக்குடி காங்., எம்.எல்.ஏ., மாங்குடி மக்களிடம் மனு வாங்கினார்.தேவகோட்டை காங்., அலுவலகத்தில் செவ்வாய், சனி தோறும் காரைக்குடி தொகுதி காங்., எம்.எல்.ஏ. மாங்குடி மக்களிடம் மனுக்களை வாங்குவார்.செப்.25ல் தேவகோட்டை காங். அலுவலகத்தில் எம்.பி. கார்த்தி பங்கேற்ற கூட்டத்தில் மோதல்

தேவகோட்டை:தேவகோட்டையில் நகர காங்., கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் அருகில் உள்ள கடையில்அமர்ந்து காரைக்குடி காங்., எம்.எல்.ஏ., மாங்குடி மக்களிடம் மனு வாங்கினார்.

தேவகோட்டை காங்., அலுவலகத்தில் செவ்வாய், சனி தோறும் காரைக்குடி தொகுதி காங்., எம்.எல்.ஏ. மாங்குடி மக்களிடம் மனுக்களை வாங்குவார்.செப்.25ல் தேவகோட்டை காங். அலுவலகத்தில் எம்.பி. கார்த்தி பங்கேற்ற கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. செவ்வாய் கிழமையான நேற்று மதியம் 12:50 மணிக்கு எம்.எல்.ஏ. மாங்குடி காங். அலுவலகம் வந்தார். அவரது ஆதரவாளர்கள் சஞ்சய் , சபாபதி அலுவலகம் பூட்டப்பட்டுஉள்ளது. சாவி கிடைக்க வில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் அருகில் உள்ள கடையில் அமர்ந்து மனு வாங்கினார்.அலுவலகம் பூட்டியிருந்தது பற்றி எம்.எல்.ஏ. கூறுகையில், வழக்கமாகசாவி வைத்திருப்பவர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றதால் இரவு சாவியை நகர் தலைவரிடம் கொடுத்துள்ளார். அவரும் சாவியை காரில் வைத்து விட்டு, மதுரை சென்று விட்டார். இது தான் காரணம் வேறு ஒன்றும் இல்லை, என்றார்.

நகர் தலைவர் லோகநாதனிடம் கேட்டபோது, காலையில் சொன்னபோதே அவசரமாக வெளியூர் சென்றுள்ளதாகவும் அடுத்த நாள் சேர்த்து வைத்து கொள்வோம் என்று கூறிவிட்டேன். தற்போது மதுரையில் உள்ளதாக போனில் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X