பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி கிராமசபா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருப்பூர்:காந்தி ஜெயந்தி விழா கிராம சபா கூட்டம், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், காந்தி ஜெயந்தி விழாவுக்கு கிராமசபா கூட்டம் நடத்த, தமிழக அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும், தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம் ஒன்றியங்கள்,

திருப்பூர்:காந்தி ஜெயந்தி விழா கிராம சபா கூட்டம், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், காந்தி ஜெயந்தி விழாவுக்கு கிராமசபா கூட்டம் நடத்த, தமிழக அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கும், தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம் ஒன்றியங்கள், ஊராட்சி தலைவர் தேர்தல் நடக்கும், மூன்று ஊராட்சிகள், வார்டு உறுப்பினர் தேர்தல் நடக்கும், 14 ஊராட்சிகளில், கிராமசபா கூட்டம் நடக்காது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், கிராமசபா கூட்டம் நடக்காது.கலெக்டர் வினீத் கூறுகையில், ''காந்தி ஜெயந்தி நாளான, அக்., 2ல், கிராமசபா கூட்டம் நடக்க உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கிராமசபா கூட்டம் நடக்கும். ஊராட்சிகளை சேர்ந்த வாக்காளர்கள், கிராம சபா கூட்டங்களில் பங்கேற்று, ஊராட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X