பொது செய்தி

தமிழ்நாடு

புலிகளை பாதுகாப்போம் ஊர்வலம் துவக்கம் : 7500 கி.மீ. தூரம் பயணிக்க திட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கூடலூர்:மத்திய அரசின் 'புலிகளை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு ஊர்வலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் துவங்கியது.75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் 'புலிகளை பாதுகாப்போம்' என்ற வனத்துறை ஊர்வலம் தமிழகத்தில் சமீபத்தில் துவங்கியது. இது நேற்று முன்தினம் தேனி, சின்னமனுார், கம்பம், கூடலுார் வழியாக குமுளியில் நிறைவடைந்தது.புலிகள்

கூடலூர்:மத்திய அரசின் 'புலிகளை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு ஊர்வலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் துவங்கியது.

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் 'புலிகளை பாதுகாப்போம்' என்ற வனத்துறை ஊர்வலம் தமிழகத்தில் சமீபத்தில் துவங்கியது. இது நேற்று முன்தினம் தேனி, சின்னமனுார், கம்பம், கூடலுார் வழியாக குமுளியில் நிறைவடைந்தது.

புலிகள் காப்பக கள இயக்குனர் தீபக் பெல்கி, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதிவ்யா, கூடலூர் ரேஞ்சர் அருண்குமார் ஆகியோர் கார், டூவீலர் ஊர்வல விழிப்புணர்வு கொடியை,தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் சுனில் பாபு, உதவி கள இயக்குனர் மனுசத்யன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

ஊர்வலம் மீண்டும் கேரளா தேக்கடியில் இருந்து புறப்பட்டு ஆழியாறு, ஆனைமலை, முதுமலை வழியாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அக். 2ல் நிறைவடையும். மொத்தம் 7500 கி.மீ., தொலைவு பயணிக்க உள்ளது என தேக்கடி புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X