சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலிடி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாததால் திருநெல்வேலி டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் ராமநாதபுரத்தில்இருந்து இலங்கைக்கு 80 கிலோ போதைப்பொருள் கடத்திய போது அப்போதைய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.,ரகுபதி, 11 பேரை

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாததால் திருநெல்வேலி டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் ராமநாதபுரத்தில்இருந்து இலங்கைக்கு 80 கிலோ போதைப்பொருள் கடத்திய போது அப்போதைய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.,ரகுபதி, 11 பேரை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடக்கிறது.

தற்போது ரகுபதி திருநெல்வேலி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி.,யாக உள்ளார். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நேற்று அவர் நேரில் ஆஜராகவில்லை.இதனையடுத்து டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பித்து புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X