சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தியாகிகளின் வாரிசுக்கான இட ஒதுக்கீடு ரத்தா

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:தியாகிகளின் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பத்தை தமிழக அரசு உதாதீசனப்படுத்துகிறது என்று தியாகிகளின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி அவர்கள் காலத்துக்கு பின்னர் அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள்
 தியாகிகளின் வாரிசுக்கான  இட ஒதுக்கீடு ரத்தா

நாகர்கோவில்:தியாகிகளின் வாரிசுகளுக்கான- ஒதுக்கீடுகளை ரத்து செய்து, சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பத்தை தமிழக அரசு உதாதீசனப்படுத்துகிறது என்று தியாகிகளின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு செம்பு பட்டயம் வழங்கி அவர்கள் காலத்துக்கு பின்னர் அவர்களின் வாரிசுளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.தமிழக அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் நான்கு இடங்களும், விவசாய படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழ் படித்தவர்கள், அரசு பள்ளியில் படித்தவர்கள் என புது புது ஒதுக்கீடு வந்து கொண்டிருக்கிறது.இதனால் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கான இந்த ஒதுக்கீடுகளை சத்தம் இல்லாமல் அரசு ரத்து செய்துள்ளது. இதனால் சுதந்திர போர் தியாகிகளின் வாரிசுகள் விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து நாகர்கோவிலை சேர்ந்த தியாகி வேலாயுதன்பிள்ளை மகன் பத்மகுமார் கூறியதாவது: 2018-ல் எனது மூத்த மகளுக்கு இந்த கோட்டாவில் பி.எஸ்.சி., வேளாண்மை படிப்புக்கு விண்ணப்பத்தேன். கட்ஆப் மதிப்பெண்ணில் ஏற்பட்ட சிறிய வித்தியாசத்தில் வேறு ஒரு தியாகியின் பேத்திக்கு அந்த இடம் கிடைத்தது.

கடந்த ஆண்டு வரை இந்த ஒதுக்கீடு இருந்தது.இந்த ஆண்டு எனது இரண்டாவது மகளுக்கு விண்ணப்பிக்க அதற்கான இணைய தளத்தில் சென்ற போது இந்த ஒதுக்கீட்டை காண முடியவில்லை. இதனால் இந்த வாய்ப்பு பறிபோய் உள்ளது.அரசு புதிதாக ஒதுக்கீடு வழங்கும் போது ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடு பாதிக்காமல் வழங்க வேண்டும்.

இந்த ஆண்டிலேயே தியாகிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க ஐகோர்ட் தானாக வழக்குப்பதிவு செய்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான வசதி எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X