பொது செய்தி

தமிழ்நாடு

14 கி.மீ., நடந்து சென்று குறை கேட்ட கலெக்டர்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (3+ 7)
Share
Advertisement
வாணியம்பாடி :திருப்பத்துார் கலெக்டர் அமர்குஷ்வாஹா, நெக்னாமலைக்கு 14 கி.மீ., நடந்து சென்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளது நெக்னாமலை. இந்த மலை கிராமத்திற்கு செல்ல கடந்த ஆட்சியில், 14 கி.மீ.,க்கு தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.ஒரு மாதமாக பெய்த மழையால் சாலை முழுதும் சேதமாகி, வாகனங்கள் செல்ல
14 கி.மீ., நடந்து சென்று குறை கேட்ட கலெக்டர்

வாணியம்பாடி :திருப்பத்துார் கலெக்டர் அமர்குஷ்வாஹா, நெக்னாமலைக்கு 14 கி.மீ., நடந்து சென்று, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளது நெக்னாமலை. இந்த மலை கிராமத்திற்கு செல்ல கடந்த ஆட்சியில், 14 கி.மீ.,க்கு தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது.ஒரு மாதமாக பெய்த மழையால் சாலை முழுதும் சேதமாகி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதி மக்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி, மலையடிவாரம் துாக்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதையறிந்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, அதிகாரிகளுடன் நேற்று நெக்னாமலைக்கு 14 கி.மீ., துாரம் நடந்து சென்று மலைவாழ் மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அங்கு வசிக்கும் 82 பேருக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் தலா, 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம், 2.20 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருவதை கலெக்டர்
பார்வையிட்டார்.மேலும், கழிவறைகள் கட்ட 80 பேருக்கு தலா, 12 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு
செய்த உத்தரவையும் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (3+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
29-செப்-202123:35:17 IST Report Abuse
muthu All collector should monitor and talk to bottom level staff that how many computer application received and how many rejected for not getting corruption etc for patta transfer etc to serve the public in good honest way .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
29-செப்-202119:45:12 IST Report Abuse
S. Narayanan சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டி. அதைப்போல நல்லது நினைத்த அந்த கலெக்டர் அவர்களுக்கு ஆப்பு வைக்க எத்தனை அமைச்சர்கள் தயாராக இருப்பார் என்று போக போக தெரியும்.
Rate this:
Cancel
Gopal - Perambalur,இந்தியா
29-செப்-202114:54:34 IST Report Abuse
Gopal இரண்டு காரியங்கள் இதன் மூலம் அவருக்கு கிடைத்தது ஒன்று உடற்பயிற்சி இரண்டு விளம்பரம். கடைசியில் மக்களுக்கு கிடைப்பதோ முட்டை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X