பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை காட்டி பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை:கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட சரண்டர் நிறுத்தி வைப்பு, ஜி.பி.எப்,வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை திரும்ப வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் சங்க மாநிலபொது செயலாளர் ஆ.செல்வம் கூறியதாவது: சங்க மாநில செயற்குழு சமீபத்தில் நடந்தது. இதில் சென்னையில் டிச.,18, 19ல் மாநில மாநாடு நடத்த முடிவு

மதுரை:கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட சரண்டர் நிறுத்தி வைப்பு, ஜி.பி.எப்,வட்டி குறைப்பு போன்ற சலுகைகளை திரும்ப வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சங்க மாநிலபொது செயலாளர் ஆ.செல்வம் கூறியதாவது: சங்க மாநில செயற்குழு சமீபத்தில் நடந்தது. இதில் சென்னையில் டிச.,18, 19ல் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடப்படும்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும், என்றார்.

இதில் சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தாலும், பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. மேலும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.

காலியான 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காண்ட்ராக்ட் ஒப்பந்தமுறையை ரத்து செய்து காலமுறை சம்பளம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X