பொது செய்தி

தமிழ்நாடு

பணிமாறுதல் கேட்டு வரக்கூடாது

Added : செப் 29, 2021
Share
Advertisement
மதுரை:'உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் போலீசாரின் அனைத்து குறைகளையும் கேட்டு தீர்வு காண வேண்டும் என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்ட நிலையில், பணிமாறுதல் குறித்து கேட்டு வரக்கூடாது என தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., மல்லிகா உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின்கீழ் நகர், மாவட்ட போலீசார் மற்றும் சிறப்புப்பிரிவு

மதுரை:'உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் போலீசாரின் அனைத்து குறைகளையும் கேட்டு தீர்வு காண வேண்டும் என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்ட நிலையில், பணிமாறுதல் குறித்து கேட்டு வரக்கூடாது என தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., மல்லிகா உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நகர், மாவட்ட போலீசார் மற்றும் சிறப்புப்பிரிவு போலீசாருக்கு செப்.,30ல் குறைதீர்க்கும் முகாம் நடத்த டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். எந்த குறைகளை வேண்டுமானாலும் தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவித்த நிலையில், அதுகுறித்த சுற்றறிக்கை உயர்அதிகாரிகள் மூலம் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரிவு போலீசாருக்கு டி.ஐ.ஜி., மல்லிகா அனுப்பிய சுற்றறிக்கையில், செப்., 30ல் தனது தலைமையிலும், அக்.,15ல் ஐ.ஜி., தலைமையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கும். தான் நடத்தும் முகாமில் பணிமாறுதல் தொடர்பான மனுக்களை தவிர்த்து பிற மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

போலீசார் கூறியதாவது: இப்பிரிவில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. அவரவர் பணிமாறுதல் கேட்டு இடம் மாறி சென்றால் மேலும் ஆள் பற்றாக்குறை ஏற்படும். இதை தவிர்க்கவே, பணிமாறுதல் குறித்து கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் போலீசாருக்கு குடும்பம், மருத்துவம் தொடர்பான பிரச்னைகளால் இடமாறுதல் கேட்கலாம். எனவே அதுபோன்ற காரணங்களுக்கு இடமாறுதல் அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இப்பிரிவுக்கு தேவையான போலீசாரை நியமிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X