கொரோனா நீண்ட காலம் இருக்குமாம்ம்ம்...

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஜெனிவா:கொரோனா பெருந்தொற்று பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும்' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சீனாவில் 2019 இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று நீண்ட காலத்திற்கு பரவும். முதல் 2வது
 கொரோனா நீண்ட காலம் இருக்குமாம்ம்ம்...

ஜெனிவா:கொரோனா பெருந்தொற்று பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும்' என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் 2019 இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்து உள்ளதாவது:

கொரோனா பெருந்தொற்று நீண்ட காலத்திற்கு பரவும். முதல் 2வது அலைகளின் போது ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பயன்பாடு கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அடைய உதவலாம். ஆனாலும் உலக நாடுகள் வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பொது சுகாதாரத்தை முதன்மையான ஒன்றாக உலக நாடுகள் கருத வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும். மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்தல் மட்டும் போதாது.

தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X