பொது செய்தி

இந்தியா

குடும்ப ஓய்வூதியத்திற்கான வருமான வரம்பை உயர்த்த முடிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுடில்லி:இறந்த ராணுவத்தினரின் மன நலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான வரம்பை உயர்த்த முடிவு செய்துள்ளதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.மறைந்த ராணுவத்தினரின் குடும்பத்தில் மன நலம் குன்றிய அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோர் குடும்ப ஓய்வூதியம்

புதுடில்லி:இறந்த ராணுவத்தினரின் மன நலம் பாதிக்கப்பட்ட அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான வரம்பை உயர்த்த முடிவு செய்துள்ளதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறைந்த ராணுவத்தினரின் குடும்பத்தில் மன நலம் குன்றிய அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு, அவர்களின் இதர வருவாய் வரம்பு, 9,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்த வருவாய் வரம்பை உயர்த்த ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, மறைந்த ராணுவத்தினர் இறுதியாக வாங்கிய ஊதியத்தில், 30 சதவீதத்திற்கு குறைவாக இதர வருவாய் பெறும், அவர்களின் மனநலம் குன்றிய அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், சகோதர, சகோதரிகள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவர். 'இந்த உத்தரவு இந்தாண்டு பிப்., 8 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்' என, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X