பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலேயர் கால மைல்கல்; பாதுகாக்க எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பல்லடம்:ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம் -- உடுமலை ரோட்டில், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல், ரோட்டோரத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. அதில், பல்லடம் 3 மைல், உடுமலை, 26 மைல் என, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தன்னார்வலர்கள்
 ஆங்கிலேயர் கால மைல்கல்; பாதுகாக்க எதிர்பார்ப்பு

பல்லடம்:ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம் -- உடுமலை ரோட்டில், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல், ரோட்டோரத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. அதில், பல்லடம் 3 மைல், உடுமலை, 26 மைல் என, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தன்னார்வலர்கள் கூறியதாவது:ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மைல் கல், பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்துள்ளது. காலப்போக்கில் அவை மாயமாகி விட்டன. உடுமலை ரோட்டில் உள்ள மைல்கல்லும் அதுபோன்று பழமையானது.இதேபோல், கரடிவாவி பகுதியிலும் ஒரு மைல் கல் உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலத்தில், பெயின்ட் பயன்படுத்தியும், நவீன போர்டு களாலும் ஊர்களின் தொலைதுாரம் குறிப்பிடப்படுகிறது. ஆனால், எந்தவித வசதியும் இல்லாத அக்காலத்தில், கற்களில் செதுக்கியே மைல் கல் எழுதப்பட்டுள்ளது.இது பண்டைய நாகரிகத்தின் சான்று. இப்படிப்பட்ட பழமையான இந்த மைல் கல் கேட்பாரற்று ரோட்டில் கிடக்கிறது. இதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரோட்டோரத்தில் நடப்பட்டிருந்த இந்த மைல் கல், சமீபத்தில் நடந்த ரோடு சீரமைப்புப் பணியின்போது பெயர்ந்து கிடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X