பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு : 32 சதவீதம்! எட்டாவது சுற்று பேச்சில் ஏற்பட்ட உடன்பாடு| Dinamalar

தமிழ்நாடு

பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு : 32 சதவீதம்! எட்டாவது சுற்று பேச்சில் ஏற்பட்ட உடன்பாடு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
திருப்பூர்:பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து தொழிற்துறையினர், தொழிற்சங்கத்தினர் இடையேயான பேச்சு வார்த்தையில், 32 சதவீதம் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில்
பனியன் தொழிலாளருக்கு சம்பள உயர்வு : 32 சதவீதம்! எட்டாவது சுற்று பேச்சில் ஏற்பட்ட உடன்பாடு

திருப்பூர்:பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து தொழிற்துறையினர், தொழிற்சங்கத்தினர் இடையேயான பேச்சு வார்த்தையில், 32 சதவீதம் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.

திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் தொழிற்துறை தரப்பில் 'சைமா', திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'டீமா', 'நிட்மா', 'சிம்கா' மற்றும் 'டெக்மா' ஆகிய சங்கங்கள்.தொழிற்சங்கங்கத்தினர் தரப்பில், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்., ஏ.டி.பி., - பி.எம்.எஸ்., மற்றும் ஐ.என்.டி.யு.சி., ஆகிய சங்கங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த ஆக., 4ம் தேதி முதல் ஏழு சுற்று பேச்சு வார்த்தையில் முடிவு எட்டவில்லை. தொழிற்சங்கங்கள் தரப்பில் தற்போதுள்ள சம்பளத்தை விட, 90 சதவீதம் கூடுதல் ஊதியம், 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயரும் விலைவாசி புள்ளிக்கு 30 காசு பஞ்சப்படி என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.தொழிற்துறை தரப்பில் அடுத்த நான்காண்டுக்கு 28 சதவீதம் என்ற அளவு ஊதிய உயர்வு வழங்க தயாராக இருந்தனர். இதனால், கடந்த ஏழு முறை நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.

நேற்று மாலை 'சைமா' கூட்டரங்கில், 8வது சுற்று பேச்சு வார்த்தை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு துவங்கிய பேச்சில், இரவு 9:30 மணியளவில் உடன்பாடு ஏற்பட்டது. இதில், வரும் 2025ம் ஆண்டு வரை மொத்தம் 32 சதவீதம் சம்பள உயர்வு, 25 ரூபாய் பயணப்படி, விலைவாசி உயர்வுக்கேற்ப 15 ஆயிரம் ரூபாய்க்கு 14.5 காசு பஞ்சப்படி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.இதற்கான ஒப்பந்தம் இரு தரப்பிடையே இன்று பகல் 1:00 மணிக்கு கையெழுத்தாகிறது.

முன்னதாக பேச்சுவார்த்தை குழு தலைவர் பிரேம் துரை தலைமை வகித்தார். ஈஸ்வரன், பொன்னுசாமி (சைமா), ராஜா சண்முகம், வேலுசாமி,(ஏற்றுமதியாளர் சங்கம்), கிருஷ்னண் (டெக்மா) ரத்தினசாமி, ராஜாமணி , பழனிசாமி (நிட்மா), முத்துரத்தினம், செந்தில் (டீமா) , விவேகானந்தன் (சிம்கா) மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.வரும் 2025ம் ஆண்டு வரை மொத்தம் 32 சதவீதம் சம்பள உயர்வு, 25 ரூபாய் பயணப்படி, விலைவாசி உயர்வுக்கேற்ப 15 ஆயிரம் ரூபாய்க்கு 14.5 காசு பஞ்சப்படி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X