தமிழ்நாடு

எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு... நல்ல காலம்! வேலையை துவக்க ஐகோர்ட் உத்தரவு!

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்கி, வேலையை துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 21.16 கோடி ரூபாயில், 27 துாண்களுடன் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டது.அணுகுசாலைக்கு
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கு...  நல்ல காலம்! வேலையை துவக்க ஐகோர்ட் உத்தரவு!

கோவை:கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மேம்பாலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்கி, வேலையை துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்குச் செல்ல, 2013ல், 21.16 கோடி ரூபாயில், 27 துாண்களுடன் ரயில்வே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டது.

அணுகுசாலைக்கு இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு பாலம் கட்ட ஆரம்பித்ததால், அப்பகுதி பொதுமக்கள், கோர்ட்டுக்குச் சென்றனர்.மனுவை விசாரித்த நீதிபதி, 'ஆறாவது துாண் வரை, 600 மீட்டர் துாரத்துக்கு அணுகு சாலை அமைத்தபின், பாலம் பணியை தொடர வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே, நிலம் கையகப்படுத்த வேண்டும். அதுவரை பணியை நிறுத்தி வைக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

'நிலம் கையகப்படுத்த சதுரடிக்கு 2,939 ரூபாய் வரை வழங்கலாம்' என, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. அதை, வருவாய்த்துறை நில எடுப்பு துறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில், சதுரடிக்கு, 2,600 ரூபாய் வழங்க வருவாய்த்துறையினரும், பெற்றுக்கொள்ள நில உரிமையாளர்களும் ஒத்துக்கொண்டனர். மூன்று மாதத்துக்குள் இழப்பீடு வழங்க, ஐகோர்ட் அறிவுறுத்தியது.

இழப்பீடு வழங்காததால், நில உரிமையாளர்களால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, அக்., 26ல் வந்தபோது, 'செப்., 26க்குள் இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். இல்லையெனில், முக்கியமான அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும்' என, ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரித்தனர்.பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, இழப்பீடு வழங்க, உடனடியாக, 29 கோடியே, 37 லட்சத்து, 87 ஆயிரத்து, 910 ரூபாய் ஒதுக்கியது; இவ்விபரம், ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது, 'நில உரிமையாளர்களுக்கு, 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தி, வேலையை உடனடியாக துவக்க வேண்டும்' என, ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.இதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்திருக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால், இப்பகுதியை சேர்ந்த, 30 ஆயிரம் மக்கள் பயனடைவர்.
சதுரடிக்கு எவ்வளவு ரூபாய்?
நில உரிமையாளர்கள் கூறுகையில், 'பாலத்துக்கு நிலம் தேவையான பகுதியில், சிலரிடம் மட்டுமே காலியிடம் இருக்கிறது. பலரது வீடுகள், கம்பெனிகள், கட்டடங்கள் இடிபடும். காலியிடத்துக்கு சதுரடிக்கு எவ்வளவு கட்டடங்களுக்கு எவ்வளவு ரூபாய் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும். எவ்வளவு துாரம், யார் யாருடைய நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்க வேண்டும். கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டியதற்காக, பொத்தாம் பொதுவாக, தொகையை குறிப்பிடக்கூடாது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X