பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டு(2021-22) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இக்கல்லுாரியில் கடந்த, 25 முதல் 28 ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடந்தது. கல்லுாரியில் உள்ள, 301 இடங்களில் பெரும்பாலான இடங்களில் மாணவியர் சேர்ந்துள்ளனர்.

கோவை:புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டு(2021-22) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இக்கல்லுாரியில் கடந்த, 25 முதல் 28 ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடந்தது. கல்லுாரியில் உள்ள, 301 இடங்களில் பெரும்பாலான இடங்களில் மாணவியர் சேர்ந்துள்ளனர். கல்லுாரியில் ஏற்கனவே சேர்ந்த மாணவியருக்கு இடமாறுதல் வாயப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு, நாளை கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவியர் மட்டுமின்றி, விண்ணப்பிக்காத மாணவியரும் பங்கேற்கலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X