இந்தியா

உத்தரகண்ட் மாநில எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்?

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : இந்திய - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், அப்பகுதியில் மூன்று மணி நேரம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இநம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாராஹோட்டி என்ற இடத்திற்குள் கடந்த மாதம் 30ம் தேதி சீன ராணுவத்தினர் 100 குதிரைகளில் அத்துமீறி
 உத்தரகண்ட் மாநில எல்லை, அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்?

புதுடில்லி : இந்திய - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், அப்பகுதியில் மூன்று மணி நேரம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இநம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாராஹோட்டி என்ற இடத்திற்குள் கடந்த மாதம் 30ம் தேதி சீன ராணுவத்தினர் 100 குதிரைகளில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அங்கு மூன்று மணி நேரம் அவர்கள் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்த நடை பாலம் ஒன்றை அவர்கள் தகர்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


தகவல் அறிந்து நம் ராணுவம் மற்றும் இந்தோ - திபெத் போலீஸ் படை விரைந்ததும், சீன வீரர்கள் அந்த இடத்தை விட்டு சென்றாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நடக்கவில்லை என தெரிகிறது.'ஆனால் அரசிடம் இதுபோன்ற தகவல் எதுவும் இல்லை' என, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் எதிர்புறத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே புதிதாக எட்டு இடங்களில் 'கன்டெய்னர்கள்' வாயிலாக செய்யப்பட்ட நவீன வசிப்பிடங்களை சீன ராணுவம் உருவாக்கி உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202120:26:39 IST Report Abuse
அப்புசாமி சும்மா... குளிருக்கு டீ குடிக்க வந்தாங்க...
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
29-செப்-202108:39:58 IST Report Abuse
Amal Anandan மோடி ஆட்சிக்கு வநததும் சீனாக்காரன் வந்துடுவானுனு உருட்டுனாங்க. இப்போ நிலைமை தலை கீழ்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
29-செப்-202107:14:31 IST Report Abuse
Milirvan எங்களுக்கு எப்போது வசதியோ, எங்கு வசதியோ, எப்படி வசதியோ, எந்த முறை வசதியோ அப்படி திருப்பி அடிப்போம் என்று அமெரிக்கா, தாம் திருப்பி அடிப்பதை பற்றி கூறியதாக ஞாபகம்.. நாமும் அவனுக்கு வலிக்கும் இடத்தில, நம் சவுகரியம் பார்த்து பலமாக அடிக்க வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X