பொது செய்தி

தமிழ்நாடு

'குவிஸ்' போட்டியில் பங்கேற்பு கட்டாயம்; பள்ளிகளுக்கு உத்தரவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:தேசிய அளவிலான பிட் இந்தியா வினாடி-வினா போட்டியில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைந்தபட்சம் இரு மாணவர்களையாவது, கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பிட் இந்தியா இயக்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சரகம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான வினாடி-வினா போட்டியை

கோவை:தேசிய அளவிலான பிட் இந்தியா வினாடி-வினா போட்டியில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைந்தபட்சம் இரு மாணவர்களையாவது, கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பிட் இந்தியா இயக்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சரகம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான வினாடி-வினா போட்டியை நடத்துகின்றன.தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில், ஆன்லைன் மூலம் இப்போட்டி வரும் அக்., 29ம் தேதி நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், போட்டியில் பங்கேற்கலாம்.ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், தலா இரு மாணவர்கள் முன்பதிவு கட்டணமின்றி பங்கேற்கலாம். கூடுதல் மாணவர்கள் பங்கேற்கும் பட்சத்தில், நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.இது சார்ந்த விபரங்களை, www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். அனைத்து வகை பள்ளி மாணவர்களையும் இப்போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டுமென, ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டத்தில், வினாடி-வினா போட்டிக்கு முன்பதிவு செய்து, பங்கேற்பாளர்களின் பட்டியல் அனுப்புமாறும், பங்கேற்போரை ஊக்குவித்து, பள்ளி அளவில் தயார்ப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X