பொது செய்தி

தமிழ்நாடு

தர ஊதிய உயர்வு எப்போது? 4,000 ஆசிரியர்கள் தவிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:அரசாணை வெளியிட்டு பல மாதங்கள் கடந்தும், அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு தர ஊதியம் வழங்கப்படவில்லை.தமிழகத்தில், 146 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி, ஊதியம் தவிர்த்து பணி மேம்பாட்டு தரஊதியம் வழங்கப்படுகிறது.அதன் படி, பணியில் சேர்ந்த நாள் முதல்,

கோவை:அரசாணை வெளியிட்டு பல மாதங்கள் கடந்தும், அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு தர ஊதியம் வழங்கப்படவில்லை.தமிழகத்தில், 146 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி, ஊதியம் தவிர்த்து பணி மேம்பாட்டு தரஊதியம் வழங்கப்படுகிறது.அதன் படி, பணியில் சேர்ந்த நாள் முதல், பி.எச்டி., எம்.பில்., ஆகிய கல்வித்தகுதிகளின் அடிப்படையில், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்து ஒன்றும், 11ம் ஆண்டில் ஒன்றும், இணை பேராசிரியர் தகுதி பெற்ற பின்பு என்ற முறையே, தர ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்.2007ல் பணியில் சேர்ந்தவர்கள் இணை பேராசிரியர் தகுதி பெற்றும் இதுவரை, 11ம் ஆண்டில் ( பணியில் சேர்ந்த நாள் முதல்)வழங்கப்படவேண்டிய பணிமேம்பாடு தர ஊதியமே வழங்கப்படவில்லை.ஊதிய உயர்வு சார்ந்த பணப்பலன்களை பெற முடியாமல், 4,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 2020 மார்ச் மாதம், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.'புதிய அரசை நம்புகிறோம்'தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்க தலைவர் வீரமணியிடம் கேட்டபோது, '' கடந்த ஆட்சியில், அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான செயல்பாடுகள் நடந்தது. புதிய அரசு, பணி மேம்பாட்டு தரம் ஊதியம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள, 4,000 பேரின் பணப்பலன்களை பெற உரிய நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கின்றோம். இதுகுறித்து, மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X