பொது செய்தி

தமிழ்நாடு

ஆவாரம்பாளையத்தில் மின்கம்பத்தால் துன்பம்!

Added : செப் 29, 2021
Share
Advertisement
பராமரிப்பில்லாத பூங்காதடாகம் ரோடு, வித்யா காலனியில் உள்ள, மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இப்பூங்காவை முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.- கண்ணன், வித்யா காலனி.மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், சி.ஆர்.பி.எல். மேற்கு காலனியில் உள்ள, மின் கம்பம் (எண்:505) சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தில் கடந்த சில

பராமரிப்பில்லாத பூங்காதடாகம் ரோடு, வித்யா காலனியில் உள்ள, மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இப்பூங்காவை முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.- கண்ணன், வித்யா காலனி.

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், சி.ஆர்.பி.எல். மேற்கு காலனியில் உள்ள, மின் கம்பம் (எண்:505) சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தில் கடந்த சில மாதங்களாக, விளக்கும் எரிவதில்லை. இக்கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்; மின் விளக்கும் பொருத்த வேண்டும்.- செந்தில்குமார், சிங்காநல்லுார்.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 28வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- ரங்கநாதன், மாரியம்மன் கோவில் வீதி.

குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட, சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., காலனியில், துாய்மை பணி மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளில் குப்பை குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கவுதம், பி.எஸ்.என்.எல்., காலனி.

தொடர் விபத்துமாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், படக்கே கவுண்டர் வீதியில் சாக்கடை கால்வாய் சிலாப் சிதிலமடைந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- ராஜேந்திரன், ஒண்டிப்புதுார்.

சிதிலமடைந்த கட்டடம்சோமனுார் சுகாதார நிலையத்தின் மேற்சுவர் சிதிலமடைந்துள்ளது. இங்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சோமனுார் பஸ் ஸ்டாண்ட் விழுந்து ஏற்பட்ட விபத்து போல், இங்கும் ஏற்படுவதற்கு முன், இதை சீரமைக்க வேண்டும்.- மணி, சோமனுார்.

குழாய் உடைப்புகுடிநீர் வீண்தாளியூர் ரோடு, கலிக்கநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- சண்முகவேல், கலிக்கநாயக்கன்பாளையம்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 89வது வார்டுக்கு உட்பட்ட, சுண்டக்காமுத்துார், தியாகராஜா நகரில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கிருஷ்ணகுமார், தியாகராஜா நகர்.

போக்குவரத்துக்கு இடையூறுமாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, பாலன் நகரில், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இக்குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.- கஸ்துாரிதாமு, பாலன் நகர்.

டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றணும்ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள, டிரான்ஸ்பார்மரில், கம்பம் சிதிலமடைந்துள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- அருணாச்சலம், ஆவாரம்பாளையம்.

பஜனை கோவில் வீதியில் சுகாதார கேடுதொண்டாமுத்துார், பஜனை கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- பூபதி, பஜனை கோவில் வீதி.

துாய்மை பணியாளர்கள் மாயம்பாப்பநாயக்கன்புதுார், சின்னசாமி நகருக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், குப்பை ஆங்காங்கே குவிந்துள்ளது. சாக்கடை கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- செல்வகுமார், சின்னசாமி நகர்.

விக்னேஷ் நகரில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விக்னேஷ் நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 32) பல மாதங்களாக விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- திலீப்குமார், விக்னேஷ் நகர்.

குப்பை தொட்டி வைக்கணும்தடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு, அன்பு நகரில், குப்பை தொட்டி இல்லாததால், குப்பை சாலையில் கொட்டப்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- பிரபு, இடையர்பாளையம்.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், வெள்ளலுார் ரோடு, முல்லை நகரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை நேரங்களில், குழிகளில் நிரம்பும் நீரால், சாலை இருப்பது தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- லாவண்யா, முல்லை நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X